search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு"

    ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய ‘ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு’ என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார். #PiyushGoyal #RailDrishtiDashboard
    புதுடெல்லி:

    ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய ‘ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு’ என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த இணையதளத்தை சாதாரண கம்ப்யூட்டர்கள், லேப்-டாப், மொபைல்போன், டேப்லட் என அனைத்து சாதனங்கள் மூலமாகவும் பயன் படுத்த முடியும். இதில், ரெயில்வேயின் வருமானம், வளர்ச்சி திட்டங்கள், பயணிகள் தெரிவித்த குறைகள், தீர்வுகள், பி.என்.ஆர். நிலவரம், விற்கப்பட்ட டிக்கெட் எண்ணிக்கை உள்ளிட்ட சேவைகளை எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும் அறியலாம்.

    ஒரு குறிப்பிட்ட ரெயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். உணவு ‘ஆர்டர்’ செய்த பிறகு, ஐ.ஆர்.சி.டி.சி. சமையல் கூடங்களில் உணவு தயாராவது, பார்சல் போடப்படுவது ஆகியவற்றை நேரலையில் காணலாம்.

    ரெயில்வே துறையில், இது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. வெளிப்படை தன்மையையும், பொறுப்புடைமையையும் ஊக்குவிக்கும் வகையில், இந்த இணையதளத்தை தொடங்கி இருப்பதாக பியூஸ் கோயல் தெரிவித்தார்.
    ×